பெண்களை வழிபடுகிறார்கள்! ஆனால் வழிபாட்டு தளங்களுக்கு செல்லமுடியவில்லை- கனிமொழி

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 06:54 pm
kanimozhi-press-meet

பெண்களை தெய்வமாக வழிபடுகிறோம் என்கிறார்கள் ஆனால் பெண்களால் வழிபாட்டு தளங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என திமுக மகளிரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுடைய அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த மாநாடு சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, கனிமொழி, நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சென்னை பிரகடனம் என ஐ.நா உரிமை அமைப்பு மாற்று திறனாளிகளுக்கு வழங்க வலியுறுத்தும் அனைத்து வசதிகள்உள்ளடக்கிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 13 மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பங்கேற்றனர். 

இதையடுத்து மாநாட்டில் பேசிய கனிமொழி,   “மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு முக்கியமான நாள். எத்தனையோ நாட்கள் கோரிக்கைக்காக போராடி இருக்கிறீர்கள். தற்போது அதற்காக மாநாடு நடத்துவது சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு முறையும் மாற்றுத்திறனாளிகள் சமூகநலத்துறை அலுவலகத்திற்கு எளிதில் செல்லமுடியாது. அதேபோன்று அவர்களால் மருத்துவமனைக்கு எளிதில் செல்லமுடியாத நிலை உள்ளது. பெண்களை வழிபடுகிறோம் என்கிறார்கள் ஆனால் பெண்களால் வழிபாட்டு தளங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close