டிச.4ல் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 09:07 am
dec-4-to-the-heavy-rain-indian-meteorological-center

டிச.4ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்று டிச.3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கடக்க உள்ளது. இதனால் டிச.4ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவின்  வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு பகுதிகளில் வளி மண்டலத்தில் நிலவிய மேலடுக்குச் சுழற்சி தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காணப்படுகிறது. கிழக்கு திசை காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close