குரங்கணியில் இன்று முதல் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி

  அனிதா   | Last Modified : 01 Dec, 2018 09:29 am
allow-to-practice-trekking-in-kurangani-mount

குரங்கணியில் இன்று முதல் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள நிபந்தனைகளுடன் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

போடி வனத் துறையைச் சேர்ந்த குரங்கணி மலைப் பகுதியில், குரங்கணியில் இருந்து டாப்-ஸ்டேஷன் வரை 16 கி.மீ. தொலைவு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்காக தனி பாதை அமைக்கப்பட்டு, அதில் மலைப்பயிற்சி மேற்கொள்ள வனத்துறை அனுமதி வழங்கி வந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் 11ம் தேதி சிலர் அனுமதியின்றி கொழுக்குமலை வனப் பகுதியிலிருந்து குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, 23 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணை அறிக்கையின் படி மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள புதிய விதிகள் வகுக்கப்பட்டன. இந்த புதிய விதிகளின்படி மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ’வனத் துறையினரிடம் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் அனுமதி பெறவேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவர் சான்று வழங்கவேண்டும். மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்களுடன் வனத்துறை அனுமதி பெற்ற வழிகாட்டிகள் உடன் வருவர். அவர்களுக்கு அவசர கால தொடர்புகளுக்கு வாக்கி-டாக்கிகள் வழங்கப்படும் என வனத் துறையினர்‘ தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close