சென்னையில் செயல்பட்டு வந்த விமான பயிற்சி பள்ளி திருச்சிக்கு மாற்றம்

  அனிதா   | Last Modified : 01 Dec, 2018 09:52 am
the-flight-training-school-was-transferred-to-trichy

சென்னையில் செயல்பட்டு வந்த விமான பயிற்சி பள்ளி திருச்சிக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன், சென்னை ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளியை சேர்ந்த ஜேக்கப் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, " 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சென்னையில் செயல்பட்டு வந்த மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளி திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15ம்தேதி முதல் இது செயல்பாட்டுக்கு வரும். அன்றிலிருந்து விமானி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கு 6 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது வரை 30 மாணவர்கள் இதில் பயின்று வருகின்றனர். இதில் பயிற்சி பெற பன்னிரெண்டாம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதுமானது. சென்னையில் போக்குவரத்து நெரிசல், செலவீனம் காரணமாக பயிற்சி கொடுப்பதில் சிக்கல் உள்ளதால் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. விமானநிலைய விரிவாக்கத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. திங்கள்கிழமை முதல் பூமி அடித்தளமிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கவுள்ளன" என தெரிவித்தனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close