கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி: மத்திய அரசு!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 06:27 pm

gaja-interim-relief-center-allots-354-crores

கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 1500 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரியிருந்த நிலையில், மாநில பேரிடர் நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக 353.70 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தை கடந்த மாதம் கஜா புயல் தாக்கியதில், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் 1500 கோடி ரூபாயை கோரியிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்திய குழு ஒன்றை நியமித்து, பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த குழு, தனது இடைக்கால அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்யவும், அதன்படி இடைக்கால நிதியை மத்திய அரசு ஒரு வாரத்தில் ஒதுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

இந்நிலையில், 12 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, இடைக்கால நிவாரண நிதியாக 353.70 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே மின் இணைப்புகளை சீர் செய்ய மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close