ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு: அமைச்சர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 09:30 am
breakfast-in-schools-from-jan-minister

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.  

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மணிகண்டன், அரசின் திட்டங்களை ஏளனப்படுத்தும் நோக்கில், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் படங்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார். வரும் ஜனவரியில் 11, 12 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் போன்று, காலை உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இதுகுறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close