விலையில்லா மிதிவண்டிகளில் கர்நாடக அரசின் முத்திரை

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 12:56 pm
karnataka-government-s-stamp-on-bicycles-offered-to-provided-tamilnadu-students

திண்டிவனம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் வழங்கிய விலையில்லா மிதிவண்டிகளில் கர்நாடக அரசின் முத்திரை இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 1,524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில், இருந்த வட்டவடிவிலான முத்திரையில் கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையில் மிதிவண்டிகள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வில்லையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அது தரமற்றவை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அந்த மிதிவண்டிகளை நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட மிதிவண்டிகள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close