ரஜினியை ரிலாக்ஸ் செய்வது எது? ரஜினி பதில்

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 02:20 pm
it-is-like-a-game-it-is-relaxing-rajinikanth-about-acting

இந்த வயதில் நடிப்பை தொழிலாக பார்க்கவில்லை என்றும் அதனால் தான் எனர்ஜியோடு நடிப்பதாகவும் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பே தன்னை ரியலாக்ஸ் செய்வதாக அவர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். 

பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் இந்த வயதிலும் எனர்ஜியோடு இருப்பது பற்றி பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, "ஆரம்பத்தில் நான் எனது வாழ்க்கைக்காக நடிக்க தொடங்கினேன். பின்னர் வாழ்க்கையில் எனக்கு தேவையானவை கிடைத்தன. தற்போது நடிப்பை மகிழ்ச்சியோடு செய்கிறேன். தற்போது நடிப்பு எனது தொழில் அல்ல. தொழிலாக நினைத்தால் தான் வேலை பளு தெரியும். இது எனக்கு இப்போது விளையாட்டு போல. நடிப்பே என்னை ரிலாக்ஸ் செய்கிறது. அதனால் தான் எனர்ஜியோடு இருக்கிறேன்" என்றார். 

மேலும் தற்போதெல்லாம் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது தான் தனக்கு சௌகரியமாக இருக்கின்றது. ஒருவரை சிரிக்க வைப்பது எளிதான ஒன்றல்ல.அது கடினமான காரியம் என்றும் அவர் கூறியுள்ளார். சிவாஜியை பார்த்து தான் தான் நடிக்க கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close