பிரதமர் மோடி தேசத்திற்கு நல்லது செய்யவே நினைக்கிறார்: ரஜினி

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 12:05 pm

modi-seriously-wants-to-do-good-for-the-nation-rajinikanth

பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு நல்லது செய்ய கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றும் அரசியலையும், சினிமாவையும் குழப்பிக்கொள்ள கூடாது என்று சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். 

2.0 வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ரஜினிகாந்த் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அரசியல், சினிமா என பலவற்றைக் குறித்து அவர் பேசி உள்ளார். 

அதில், "சினிமாவில் காட்டுவதையும் அரசியலையும் எப்போது குழப்பிக்கொள்ளக் கூடாது. திரையுலகில் இருப்பதை அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ள கூடாது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் சில வசனங்கள் அப்படி இருக்கும். அதற்கு பலர் பல கருத்துக்களை கூறுவார்கள். நம்மால் அதனை தடுக்க முடியாது. 

நடிகர்களால் நல்ல தலைவர்களாக இருக்க முடியும் என்பதை எம்.ஜி.ஆர் நிரூபித்தார். சினிமாவில் இருந்து அரசியிலுக்கு வர நினைக்கும் அனைவருக்கும் எம்.ஜி.ஆர் தான் ரோல்மாடல். அவரது உதவும் மனப்பான்மை எனக்கு மிகவும் பிடிக்கும். 

ஜெயலலிதா பற்றி யார் என்ன கூறினாலும் அவர் சிறந்த பெண்மணி. அவரது தன்னம்பிக்கை, தைரியத்தை எப்போதும் போற்றுவேன். அவரது ஆட்சி குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை. ஆனால் தனியாளாக ஒரு மாநிலத்தில் ஆட்சி புரிந்தது வரலாற்று சிறப்புமிக்கது. 1996 ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு பிறகும் அவர் என் மகள் திருமணத்திற்கு வந்தார். எப்போது அவர் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. அரசியலில் கமல் எனக்கு எதிரி என்று கூறுகிறார்கள். அவர் எனக்கு போட்டி என்று கூட கூற மாட்டேன். அவர் எனது நல்ல நண்பர். சக நடிகர்" என்றார்.

மேலும் பிரதமர் மோடி குறித்து பேசிய ரஜினி, "தேசத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதற்காக அவர் கடுமையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்" என்றார். 

தமிழத்தை வழிநடத்த தலைமைக்கு ஏற்பட்டுள்ள பஞ்சத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். தமிழக மக்களிடம் எல்லாவிதமான திறமைகள் இருப்பதாக தனது பேட்டியில் கூறியுள்ள ரஜினிகாந்த், அதனை ஒருங்கிணைப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட கோயில் பாரம்பரிய நடைமுறைகளில், நீதிமன்றம் தலையிடக் கூடாது எனவும் கூறியுள்ளார். கோயில் பாரம்பரியங்கள் எப்போதும் போல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பெண்கள் இதனை தவறான விதத்தில் பயன்படுத்தக்கூடாது என மீடூ விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.