புயல் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை: கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:09 pm

central-and-state-governments-did-not-perform-storm-relief-work-kamal-haasan

கஜா புயல் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

கஜா புயல் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு, மக்களின் குறைகளை கேட்டு ஆறுதல் கூறி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "கஜா புயல் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை. மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று கூடத் தெரியவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close