புயல் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் : கனிமொழி

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:37 pm
we-will-raise-the-voice-of-parliament-on-storm-impacts-kanimozhi

புயல் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, " கஜா புயல் பாதிப்புகள் குறித்து முழு அளவில் தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை. உண்மை நிலையை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை. எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் பதவிகளை காப்பாற்றி கொள்ளும் நிலையிலேயே தமிழக அரசு செயல்படுகிறது. சிலை அமைப்பதற்கு ரூ.3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு. தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது. இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்" என தெரிவித்தார்.

மேலும், "கடந்த 2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணையின் படி, இரண்டு வருடம் பணிபுரிந்த மாற்றுத்திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் இப்போதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காதது குறித்து அமைச்சர் சரோஜா பதிலளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close