முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 02:33 pm
former-advocategeneral-muthukumarasamy-died-today

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த 1994ல் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய முத்துக்குமாரசாமி 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும், பின்னர் 2016 ஆகஸ்ட் முதல் 2017 ஆகஸ்ட் வரை அரசு தலைமை வழக்கறிஞர் பொறுப்பும் வகித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக 2017 ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

கடந்த 26 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி கொலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு பரோல் வழங்கலாம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தவர் முத்துக்குமாரசாமி.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி நியமனத்தால் தலைமை வழக்கறிஞர் பணிக்கு இவர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close