மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் தி.மு.க.வை  தோலுரித்து காட்ட நேரிடும் : எச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:27 pm
if-you-do-not-stop-criticizing-the-central-government-you-will-be-able-to-show-the-dmk-h-raja

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமரையும், மத்திய அரசையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லையெனில், தி.மு.க.வை  தோலுரித்து காட்ட நேரிடும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, 30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது. கஜா புயல் தாக்கி 6 மணி நேரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று மக்களோடு நின்றார். மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் உள்பட மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் நின்று இன்று வரையிலும் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புயல் பாதித்த மாவட்டத்தில் 2 நாட்கள் தங்கி இருந்து மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு அடிப்படை தேவையான மண்ணெண்ணை முதல் அனைத்து நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்தார்.

கஜா புயலில் 6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. இது போன்ற எண்ணற்ற பணிகளை மத்திய அரசு துரிதமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் புயல் பாதித்த இடங்களை 17-வது நாளில் பார்வையிட்ட கமல் மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதேபோல மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தி.மு.க.வை தோலுரித்து காட்டுவோம். வைகோ குழப்பத்தில் உள்ளார். எல்லாம் தெரிந்த மாதிரி பேசி வருகிறார். வைகோவை துரைமுருகனே கண்டு கொள்ளவில்லை. அவர்தான் தி.மு.க. வாசலில் போய் உட்கார்ந்து கொண்டு உள்ளார். 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கனவு காண்கிறார். கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலை உள்ளது. இந்த நிலையில் இளங்கோவன் கூறி இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது" என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close