மேகதாது அணை விவகாரத்தில் எதிர்கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டம் கண் துடைப்பு நாடகம் : தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 06:03 pm

demonstration-of-opposition-in-the-meghathadu-dam-issue-eye-wipe-drama-tamilisai

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது எனவும், இது தொடர்பாக எதிர்கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டம் கண் துடைப்பு நாடகம் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளைக் செய்து வருகிறது. டெல்டா பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகளில் மத்திய அரசின் பங்குள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவநம்பிக்கையோடு பேசி வருகின்றன.

மேகதாதுவில் ஆய்வு செய்ய மட்டும்தான் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாரதிய ஜனதா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழக அரசும் ஒப்புதல் அளிக்காது. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அணை கட்ட முடியாது. வேண்டுமென்றே மேகதாது விவாகரம் தொடர்பாக எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் நடத்துகின்றனர். அருகில் உள்ள மாவட்டங்கள் கண்ணீரில் இருக்கும் போது, கண்ணீரைத் துடைப்பதை விட்டுவிட்டு கண்துடைப்பு நாடகத்தை நடத்துகின்றனர்.

மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு தமிழக பாரதிய ஜனதா தனது முழுமையான ஆதரவை தரும். சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் மீண்டும் விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது நியாயத்திற்கு கிடைத்த தீர்ப்பு" என கூறினார்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close