காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவிலுக்குச் செல்கின்றனர்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 10:06 am
temples-cows-election-stunt-for-congress-integral-to-bjp-rajnath-singh

காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு செல்வது பா.ஜ.கவினருக்கு வாழ்க்கையின் ஓர் அங்கம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர்  பேசுகையில், "காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதுவரை அவர்கள் கோவில்களுக்கு செல்வதில்லை. அதே போன்று தேர்தல் காலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினர் பசுக்களை வணங்குகின்றனர்.

ஆனால் பா.ஜ.கவினருக்கு அப்படி அல்ல. பசுக்களை வணங்குவது மற்றும் கோவில்களுக்குச் செல்வது அவர்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். எனவே காங்கிரஸ் கட்சியினர் கோவில் மட்டும் பசுக்களை பிரச்சாரத்தின் ஒரு உத்தியாக பயன்படுத்தக்கூடாது" என தெரிவித்தார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close