ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 12:28 pm

by-the-end-of-january-671-schools-in-science-labs-minister-chengottaiyan

ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 723 மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே வேலைவாய்ப்பினை பெரும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுடன் இணைந்து ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளை சேர்ந்த 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், தேர்வு மையங்கள் மண்டல வாரியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், ஒரு வாரத்திற்குள் மையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு உள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close