அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு? - தமிழக அரசு தீவிர ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 11:34 am
half-yearly-exam-postponed

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கஜா பபுயலினால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழல் உள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடக்க இருக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு படிப்பதற்கு புத்தகங்களே இல்லாத சூழ்நிலையில் அவர்களால் எப்படி தேர்வு எழுத முடியும்? எனவே அரையாண்டுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதன்படி, புயல் பாதித்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத்தேர்வு ஒத்திவைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close