மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி இல்லை இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:27 pm
there-is-not-allowed-to-protest-in-marina-sc

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் அனுமதியுடன் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அப்படி ஒருவேளை சென்னையில் மெரினாவில் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close