தமிழகத்தில் மழை தொடரும்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:11 pm

weather-forecast

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கனமழையை பொறுத்தவரை கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடரும், ஓரிரு இடங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் நாளை தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 36 செ.மீ எனவும் ஆனால் இந்த முறை 31.6 செ.மீ மட்டுமே பெய்துள்ளதாகவும் இது இயல்பைவிர 13 விழுக்காடு குறைவு எனவும் தெரிவித்தார்.

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.