ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: வைகோ, திருமா உள்ளிட்டோர் கைது!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 02:20 pm

vaiko-thirumavalavan-arrested

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியதில் வைகோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம் சாட்டினார். மேலும் தி.மு.க உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. 

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் பலரும் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். சென்னை ஆளுநர் மாளிகை அருகே உள்ள சின்னமலை பகுதியில் எதிர் கட்சியினர் திரண்டுள்ளனர். இந்த போராட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணியில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close