ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகள் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 02:55 pm

rk-nagar-case

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ஒரு பெயர் பட்டியல் வருமானவரித்துறைக்கு கிடைத்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்திருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை இணை இயக்குநர் விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close