தமிழக மீனவர்களை தாக்கக்கூடாது என இலங்கை கடற்படையினரிடம் வலியுறுத்துவோம் - தமிழ்நாடு, புதுவை கடற்படைத்தலைவர்

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 04:27 pm
we-will-urge-the-sri-lankan-navy-to-attack-tamil-fishermen-tamil-nadu-navy

தமிழக மீனவர்களை தாக்கக்கூடாது என இலங்கைக் கடற்படையினரிடம் வலியுறுத்துவோம் என்று தமிழ்நாடு, புதுவை பிராந்தியங்களுக்கான கடற்படைத்தலைவர் ஆலோக் பட்னாகர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆலோக்பட்னாகர், இந்தியா - பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடத்தலை தடுப்பது, மீனவர்களை காப்பாற்றுவது போன்ற பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். 

அடுத்த ஆண்டு இந்தியா-இலங்கை கடற்படை அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது, மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்  தாக்கக்கூடாது என்பதையும் கண்டிப்பாக  வலியுறுத்துவோம். சீன கப்பல்கள் இந்திய எல்லைக்குள் வருவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்தியக்கடற்படை எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது" என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close