மதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 05:08 pm

plastic-ban-at-madurai

மதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு வரும் ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்வதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் மறு சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக்கோரி இருளாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை அமல்படுத்த மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தடையை முதல்முறையாக மீறுவோருக்கு ரூ500 அபராதமும், தொடர்ச்சியாக மீறினால் கடையின் உரிமம் ரத்தும் செய்யப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. முன்னதாக சுற்றுலா பகுதியாக விளங்கும் மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை முதல்முறையாக அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது. 

Newstm.in


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.