டிக் டாக் விபரீதம்: பாடலுக்கு ஆக்ஷன் செய்தபோது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 05:12 pm
tiktok-app-a-man-cut-the-neck

மியூசிக்கலி டிக்டாக் ஆப் மூலம் இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

மியூசிக்கலியில் பல இளைஞர்கள் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்குக்காக தொடங்கப்பட்ட இந்த செயலியில் வித்தியாசமான முறையில் பல சவாலான செயல்களை நிறைவேற்றிடும் வகையில் டப்ஸ்மாஷ் செய்வது  இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வினையாகும் என்பதைபோல, வீடியோவிற்காக இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இதனால் அந்த இளைஞர் செய்வதறியாமல் ஷாக் ஆகி வீடியோவை துண்டித்துவிட்டார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் கசிந்தது வீடியோவில் பதிவாகி இருந்தது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close