நிஜத்தில் நடந்த 2.0 கதை... நெதர்லாந்தில் இறந்த பறவைக்கூட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 05:26 pm
hundreds-of-birds-fall-dead-from-the-sky-during-5g-test-in-netherlands

சிட்டுக்குருவி அழிவுக்கு டவர்களும், செல்போன்களும்தான் காரணம் என இயக்குநர் ஷங்கர்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 2.0 படத்தில் கூறப்பட்டது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமா? என்ற கேள்வி படத்தை பார்த்த அனைவருக்கும் எழுந்தது. நம் ஒவ்வொருவரின் செல்போனும் ஒரு சிட்டுக்குருவியின் சவப்பெட்டி என்ற வசனங்கள் 2.0 படத்தில் இடம்பெற்றிருக்கும்.

உலகம் முழுவதும் செல்போன்களும், டவர்களும் மட்டுமே சிட்டுக்குருவி அழிவுக்கு காரணமல்ல, அதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான் என ஆய்வில் கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி சிட்டுக்குருவி அழிவதற்காக செல்போன் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. அதனால் சிட்டுக்குருவி இறப்பிற்கு செல்போன் டவர்களிலிருந்துவரும் கதிர்வீச்சுகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வைப்பதால் குருவிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் 4ஜி  யை தொடர்ந்து 5ஜி சேவைக்கு பல நாடுகள் அடிபோட்டுக்கொண்டிருக்கின்றன. சில நாடுகள் அதற்கான சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளது. 5ஜி மூலம் அதிவேகம், துல்லியம் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும்.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள ஹாக் நகரில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, ஹுகைன்ஸ் பூங்காவில் திடீரென நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து விழுந்தன. அருகே உள்ள குளத்தில் நீந்திக் கொண்டிருந்த பறவைகள், உடனடியாக தங்கள் தலையை தண்ணீருக்குள் மூழ்கடித்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பறவையியல் அறிஞர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உயிரிழந்த பறவைகளை சோதித்தனர். அதில் வைரஸ் பாதிப்போ, நோய் தொற்றோ, விஷத் தாக்குதலோ இல்லை என்று தெரியவந்தது. இதனால் பறவைகள் இறப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மருத்துவம் சார்ந்த ”எரின் எலிசபெத்” என்ற வலைப்பக்கத்தில் முக்கியத் தகவல் ஒன்று வெளியானது. அதில் பறவைகள் உயிரிழந்த அதேசமயம், ஹாக் நகரில் 5ஜி அலைக்கற்றைகள் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கதிர்வீச்சால் பறவைகள் உயிரிழந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. சோதனையில் இருக்கும்போதே பறவைகள் இறப்பு சாத்தியமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலாத்தில் 5ஜி நடைமுறைக்கு வந்தால் பல பறவைகளின் இனம் அழிந்துவிடும் என்பதே சமூகா ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது. 

செல்போன் டவர்களால் பறவைகள் மட்டுமல்லாது செடிகள் 87%, மனிதர்கள் 62%, மற்ற விலங்குகள் 74% என்ற சதவீதங்களில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் பெரிதும் பாதிக்கப்படுவது பறவைகளே..! தற்போதைக்கு பறவைக்கு வந்த இதே அழிவு நாளை மனிதர்களுக்கும் வரலாம். மனிதர்களும் கதிர்வீச்சல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு நேரிடலாம் என்பதை சொல்லாமல் சொல்லியிருந்த 2.0 வின் கதை இன்று நிஜமாகியுள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close