மத்திய அரசின் கஜா நிவாரண நிதி... ‘யானை பசிக்கு சோளப்பொரி’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 07:16 pm
rajendra-balaji-press-meet

புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிதி யானை பசிக்கு சோளப்பொரி என்பது போல் உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

சிவகாசியில்  சிஎஸ்ஐ பள்ளியில் மாற்று திறனாளிகள் தின விழா நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று 337 மாற்றுத்திறனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பிலான பொருள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் சந்திர பிரபா, மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிதி யானை பசிக்கு சோளப்பொரி என்பது போல் உள்ளது. மக்கள் நல கூட்டணி போல் திமுக கூட்டணி அமைத்தால் மக்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெளனம் காக்கிறது என வைகோ குற்றசாட்டியுள்ளார். வைகோ பேச தெரியாமல் பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுவார். ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து முழுமையாக பரீசலிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் போட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ளோம். தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் முடிவு செய்வார்கள்” என தெரிவித்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close