கோவில்பட்டியில் வைகோ கொடும்பாவி எரித்து போராட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 09:44 pm
protest-against-for-vaiko

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி குறித்தும், அவரது மரணம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருவதை கண்டித்தும் அவரது உருவப்படத்திற்கு தீவைத்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி குறித்தும், அவரது மரணம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருவதை கண்டித்தும், அவர்களை உடனடியாக தூக்கில் இட வலியுறுத்தியும், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது உடன் உயிரிழந்த 14 தமிழர்களுக்கு குரல் கொடுக்காத தலைவர்களை கண்டித்தும், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் முன்பு இன்று காலையில் காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அய்யலுச்சாமி என்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உருவபொம்மையை எரித்தும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து உருவ பொம்மையை செருப்பால் அடித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக ராஜீவ்காந்தி பற்றி இழிவாக பேசி வருவதாகவும், 7 பேர் விடுதலையை பற்றி பேசும் இவர்கள், ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்த 14 தமிழர்கள் பற்றி பேச மறுப்பது ஏன்? வைகோ எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து தோற்றக்கடிக்க பாடுபடுவேன்”என்று தெரிவித்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close