மேகதாது விவகாரத்தில் உள்குத்து உள்ளது- தம்பிதுரை

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 09:35 pm
thambi-durai-press-meet

மக்களவை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்துக்கு கஜா புயல் பாதிப்புக்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தாமதம் செய்து கொண்டிருப்பதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். 

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக வழங்கியது குறைவாக உள்ளது. கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் நிவாரணமாக கேட்ட 15 ஆயிரம் கோடியை அளிக்க வேண்டும் என வரும் 11 ஆம் தேதி கூடவுள்ள மக்களவை கூட்டத்தில் வலியுறுத்தப்படும். மக்களவை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு கஜா புயல் பாதிப்புக்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தாமதம் செய்து கொண்டுள்ளது. தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் இவ்வாறு செயல்படுகிறார்கள். அணை விவகாரத்தில் அரசியல் நோக்கத்தோடு பார்ப்பது தவறு. தமிழ் உணர்வு, தமிழ்நாடு ஆகியவற்றை பாதுகாக்க திராவிட இயக்கங்கள் பாடுபட்டு கொண்டிருக்கின்றன. இந்த உணர்வை மத்திய அரசு மதிக்க வேண்டும். 

தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே அதிக நிதி உதவி வழங்கப்படுகிறது. இது வருந்தக்கூடிய நிலையில் உள்ளது. அரசியல் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக மற்ற மாநிலங்களை புறக்கணிக்கிறது. காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இதனால் பாஜக மாநில கட்சியாக மாறிவிடும் இடத்தில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதா? அல்லது ஒக்கேனக்கலில் அணை கட்டுவதா? என்ற பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது். மின்சாரத்துக்கு என்றால் ஒக்கேனக்கல் சரியாக இருக்கும். 4 மாநில ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்டமுடியாது். திமுக அதை புரிந்து கொண்டாலும், அரசியலுக்காக 4 ஆம் தேதி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்” என்று கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close