அதிமுக அரசு மக்களை கண்டுகொள்ளவில்லை, ஆட்சியை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளனர் : மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 08:51 am
the-aiadmk-government-does-not-recognize-people-mk-stalin

மக்களை கண்டுகொள்ளாத அதிமுக அரசு அவர்களது ஆட்சியை காப்பாற்றி கொள்வதில் தான் உறுதியாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில், இன்று திமுக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முதலமைச்சர் கஜா நிவாரண பணிகளை பார்வையிட்டு ‘டீ’ கடைகளில் ‘டீ’ குடிப்பது போன்ற செயல் ஊரை ஏமாற்றுவதற்கு நடத்தும் நாடகம். அடிப்படையான நிவாரண பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை என்பதுதான் எங்களுடைய ஒட்டுமொத்த குற்றச்சாட்டு என கூறினார். 

மாற்றுத்திறனாளிகள், ஜாக்டே-ஜியோ அமைப்பினர், விவசாயிகள் என ஒரு பக்கம் போராடி வரும் நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து போராடி வருகின்றனர். இதையெல்லாம்  கண்டு கொள்ளாதா இந்த ஆட்சியாளர்கள், அவர்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் தான் உறுதியாக இருக்கிறார்கள்.

கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. சிலையை, சோனியாகாந்தி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள். அதன் தொடர்ச்சியாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டேன். சில ஆங்கில ஊடகங்கள் தி.மு.க. தான் காரணம் என்று திட்டமிட்டு வீண்பழி சுமத்தி வருகின்றனர். அது உண்மையல்ல. தாக்குதல் நடத்தியவர்கள்  கைது செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். தி.மு.க.வின் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை என்பது தான் உண்மை என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close