நாளை மறுநாள் (டிசம்பர் 6) தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 'தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் அன்று தென்தமிழகம் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது' என்று தெரிவித்துள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
newstm.in