ஜனவரியில் மழலையர் பள்ளி தொடங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 11:38 am

kids-school-will-be-started-in-january-minister-chengottaiyan

ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடியில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில், நம்பியூர்  மற்றும் கோபி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளதால், அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாகவும், இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். திண்டிவனத்தில் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக  எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close