சொந்த செலவில் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: துணை முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 11:46 am
o-panneerselvam-announcement

முதல் மதிப்பெண் எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்க உள்ளதாக தேனியில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவிலும், தேனி மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவித்தார். 

மாணவர்களிடையே ஏற்படும் மதிப்பெண் அடிப்படையிலான வேறுபாடுகளை போக்கும் நோக்கில் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் எனும் துணை முதல்வரின் கருத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.  இது பற்றி விளக்கமளித்த துணை முதல்வர், தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்க உள்ளதாகக் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close