ஒப்பந்த மின் ஊழியர்களின் கூலியை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:43 pm

talking-to-the-chief-minister-about-raising-the-wages-of-contract-power-workers-minister-thangamani

மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளன. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதற்கு 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாகவும், மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாகவும் முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலிக்ககப்படும் என தெரிவித்தார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close