தமிழக மக்களுக்கு எதிராக சதி நடக்கிறது:காதர் மொய்தீன்

  அனிதா   | Last Modified : 04 Dec, 2018 12:13 pm
the-conspiracy-of-placing-tamil-nadu-people-in-hunger-and-hunger-kathar-moideen-talks

தமிழ்நாட்டு மக்களை பசியிலும், பட்டினியிலும் வாட்ட வேண்டும் என்று சதி நடப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாதுவில் புதிய அணைக் கட்டுவது தொடர்பாக கர்நாடகம் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசும்போது, "காவிரி விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை சுட்டிகாட்டி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மாறாக புதிய அணைக்கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.மேக்கேதாதுவில் அணைக்கட்டினால் தமிழகமே பாலைவனமாகும். தமிழக மக்களை பசியிலும், பட்டினியிலும் வாட்ட வேண்டும் என்ற சதி நடக்கிறது" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close