கமிஷனுக்காக செயல்படும் எடப்பாடி அரசு: முத்தரசன் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 02:07 pm
edappadi-government-works-for-the-commission-mutharasan

புயல் பாதித்த பகுதிகளில் கமிஷனுக்காக மட்டுமே எடப்பாடி அரசு செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். 

மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு, ஆய்வு செய்ய அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதற்காகவே, மத்திய அரசு இத்திட்டத்தை ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை  எடப்பாடி அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை. புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து  கமிஷன் எப்படி எல்லாம் எடுக்கலாம் என்பதில் மட்டுமே, எடப்பாடி அரசு தீவிரம் காட்டி வருகிறது என குற்றம்சாட்டினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close