டெங்கு கொசுக்களை அழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:37 pm
chennai-high-court-warns-corp-regarding-dengue-control-measures

டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்கவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி  வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் தொடர்ந்த வழக்கில் ஓராண்டுக்கு பின் சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின், இந்த காலதாமதத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறினார். கால்வாய்கள் தூர்வாரவும், அதற்காக எந்திரங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை குறிப்பிட்டார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நிதி ஒதுக்கீடு செய்தது சரிதான், என்ன பணிகள் செய்தீர்கள்? என்பது தெளிவாக தெரியப்படுத்தப்படவில்லை. எனவே, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து 18ம் தேதிக்குள் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும்’ என எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close