கடலோர மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:41 pm
chennai-weather-report

குமரிக்கடல் பகுதி முதல் தெற்கு ஆந்திர கடல் பகுதி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்ளுக்கு அநேக இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

அதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ மழையும், சோழவரம், கும்மிடிப்பூண்டியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close