குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக அரசு காலூன்ற முடியாது: ஸ்டாலின் உரை

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 02:29 pm

the-bjp-government-can-not-be-the-coldest-in-tamil-nadu-stalin

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக அரசு காலூன்ற முடியாது என்பதால் தான்  மோடி அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

திருச்சியில், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக அரசு காலூன்ற முடியாது என்பதால் தான் மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தன் மீதான வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. இதனால் தான் கர்நாடக அரசு அணைக்கட்ட தீவிரம் காட்டி வருகிறது.கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

கஜா புயலால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மேகதாது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த கண்டன கூட்டம், அவசரத்தில் நடத்தும் கூட்டம் இல்லை. தமிழகத்திற்கு வரும் ஆபத்தை தடுப்பதற்கான கூட்டம். மத்திய அரசை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தால் கர்நாடகம் அணை கட்ட முன் வந்திருக்காது. கஜா புயல் இயற்கை சதி என்றால், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது செயற்கை சதி. தமிழகத்திற்கு மத்திய பாஜக தொடர்ந்து ஓரவஞ்சனை செய்கிறது" என கூறினார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close