புறநோயாளிகள் சிகிச்சை ஒரு நாள் புறக்கணிப்பு - நோயாளிகள் கடும் அவதி

  அனிதா   | Last Modified : 04 Dec, 2018 03:15 pm

one-day-neglect-of-treatment-of-outpatients

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் இன்று புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். 

தமிழக அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று ஊதியம் வழங்கவேண்டும், அரசு  நிர்ணயித்துள்ள ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணிப்பதாக மருத்துவர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி, சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், இன்று காலை முதல் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் குறிப்பாக முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தை தொடர்ந்து, மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களை கொண்டு, சில இடங்களில் மட்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் முக்கிய மருத்துவர்கள் வாராததால், மருத்துவ பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 350வட்டார மருத்துவமனைகள், 25அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள்,1400க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 18ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும், தங்களது கோரிக்கை தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close