செயற்கை மழையை வரவழைத்தாவது தாமரையை தமிழகத்தில் மலரவைப்போம்- தமிழிசை

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 04:53 pm
tamilisai-press-meet

இயற்கை மழை வரவில்லை என்றாலும், செயற்கை மழை வரவழைத்து தாமரையை தமிழகத்தில் மலர வைப்போம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் போராட்டத்தும் நடத்துவதில் பாஜகவை பற்றி விமர்சிக்கின்றனர். தற்போது மதிமுக, விசிக கூட்டணி பற்றிதான் கவலையாக உள்ளது. தமிழக அரசு மேகதாது அணையை சட்ட ரீதியாக எதிர் கொள்கிறது. வைகோ பிரதமரை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று எப்படி பேசுவார். மு.க.ஸ்டாலின், வைகோ எத்தனை முறை புயல் பாதிப்பு இடத்தை ஆய்வு செய்தார்கள். கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு கூட அவர்கள் முழுமையாக செல்லவில்லை. முதலில் அறிவாலயம் உள்ளே வைகோவை அனுமதிக்கட்டும், அதன் பின் பிரதமரை அனுமதிக்கலாமா என வைகோ பேசலாம். இயற்கை மழை வரவில்லை என்றாலும், செயற்கை மழை வரவழைத்தாகவது தாமரையை தமிழகத்தில் மலர வைப்போம்.

முதல்வராக ஸ்டாலினை ஆக்குவோம் என்பது கனவாகதான் இருக்கும். இந்த அணி போராட்டம் மட்டுமே செய்யும். மக்களுக்காக வேறு எதுவும் செய்யாது. மின் கம்பம் சீரமைக்க 200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தென்னை விவசாயம் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. புயல் பாதித்த இடங்களை பார்வையிட பிரதமர் நிச்சயம் வருவார். அதற்கு முன் அவருடைய பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
 இழப்புகள் அதிகம்தான் தீர்வை நோக்கி  மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

பட்டேல் சிலை இருப்பதால் தான் நாடு ஒற்றுமையாக இருக்கிறது. பட்டேல் சிலை இருக்கும் இடத்தில் 15 நாட்களில் 30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏன் திருமாவளவன் விமர்சனம் செய்கிறார். 64 சதவீதம் மக்கள் பிரதமராக மோடிதான் வருவார் என கூறுகின்றனர். தொடர்ந்து பிரதமரை வைகோ மோசமாக பேசினால் சரியாக இருக்காது என எச்சரிக்கைக்கிறேன். ரஜினி பிரதமரை புகழ்ந்து பேசி வருகிறார். அவருக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள கூட்டணி நடவடிக்கை எல்லாம் முடிவு செய்து தமிழக பா.ஜ.க தலைமை அறிவிக்கும்” எனக் கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close