ஜெ. மரணம் குறித்து செய்தி வெளியிடக்கூடாது: விசாரணை ஆணையம் உத்தரவு

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 06:07 pm
arumugasamy-team-issue

முன்னாள் முதலமைச்சர் நினைவு நாளையொட்டி நாளை ஜெயலலிதா பற்றிய சர்ச்சைக்குரிய சிறப்பு கருத்துகளையோ, தொடரையோ, செய்திகளையோ வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா நினைவுநாளையொட்டி நாளை வரக்கூடிய செய்திகளுக்கு கட்டுப்பாடு விதித்து பொது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் செய்தியோ அல்லது காட்சிகளையோ வெளியிடக்கூடாது. ஜெ. மரணம் தொடர்பான செய்திகளையோ, சர்ச்சைக்குரிய தொடர்களையோ அனுமதியின்றி வெளியுடக்கூடாது என ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முன் அனுமதியின்றி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எச்சரித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாகவோ, ஜெயலலிதா மரணம் தொடர்பாகவோ சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close