நாளை 100 இடங்களில் சாலை மறியல்! கொதித்து எழுந்த மக்கள்... ஏன்? எதற்காக?

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 06:55 pm
protest-in-delta-district

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும், நிவாரணம் வழங்காததை கண்டித்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான மரங்கள், விவசாய பயிர்கள், வீடுகள், மீன்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. கஜா புயலடித்து  5 நாள் ஆகியும் முகத்தனூர், ஆய்குடி, எண்கன் ஆகிய கிராமங்களில் மின்சாரம், குடிநீர், பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடை உயிரிழப்பு என பாதிக்கப்பட்டதை இதுவரை எந்த ஒரு அதிகாரிகளோ, மின் துறை சார்ந்தவர்களோ, ஊராட்சி அலுவலர்களோ பார்க்க கூட வராததால் பொதுமக்கள் சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் செய்தனர். பின்னர் துணை வட்டாட்சியர், உதவி பொறியாளர், காவல் துறையினர் பேச்சு  நடத்தியத்தில் இன்று மாலைக்குள் மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close