பிரதமர் இந்தியாவிலிருந்து தமிழகத்தை நீக்கிவிட்டார்- டிடிவி தினகரன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 07:26 pm
ttv-dhinakaran-press-meet

பிரதமர் தமிழகத்தில் ஏற்பட்ட எந்த பாதிப்புகளையும் பார்வையிட்டது  இல்லை பிறகு எப்படி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார்? பிரதமர் இந்தியாவிலிருந்து தமிழகத்தை நிக்கிவிட்டார் என்பது போல் தோன்றுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், “நாளை ஜெயலைதாவின் நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக தெரிவித்தார். மேகதாது அணை கட்டக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமும் ஆனால் தமிழக முதல்வர் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடிப்பனிந்து செல்வர் என்று தெரிகிறது.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு நீர்வள ஆணையம் வாயிலாக அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை தமிழக அரசு எந்த விவகாரத்திற்கு அழுத்தம் தந்துள்ளது? மேகதாது விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு, மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வது தான் தமிழக அரசின் செயல்பாடாக உள்ளது. மத்திய அரசும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற அனுமதிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் போராடிதான் உரிமையை நிலை நிறுத்தவேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும். பிரதமர் தமிழகத்தில் ஏற்பட்ட எந்த பாதிப்புகளையும் பார்வையிட்டது  இல்லை பிறகு எப்படி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார்? ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழர்கள் சுட்டு கொள்ளப்பட்டபோது வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் இந்தியாவிலிருந்து தமிழகத்தை நிக்கிவிட்டது போன்றதையே இது காட்டுகிறது” என்று கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close