டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 07:49 pm

stalin-gave-relief-fund

திருவாரூர் அருகே பின்னவாசல் தனியார் திருமண மண்டபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குன்னியூர், மாவூர், திருக்கரவாசல், பின்னவாசல் கிரங்களை சேர்ந்த 3500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணம் வழங்கினார்.

தமிழகத்தை கடந்த மாதம் கஜா புயல் தாக்கியதில், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் 1500 கோடி ரூபாயை கோரியிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்திய குழு ஒன்றை நியமித்து, பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசு, இடைக்கால நிவாரண நிதியாக 353.70 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் தலைவர்களும், இளைஞர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியையும் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் திருவாரூர் அருகே பின்னவாசல் தனியார் திருமண மண்டபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குன்னியூர், மாவூர், திருக்கரவாசல், பின்னவாசல் கிரங்களை சேர்ந்த 3500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணம் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், நகர செயலாளர் வாரை பிரகாஷ், ஒன்றியசெயலாளர் புலிவலம் தேவா, மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close