நெல்லையில் ரூ.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையம்

  டேவிட்   | Last Modified : 05 Dec, 2018 01:32 am
tirunelveli-new-bus-stand-rs-78-crores-in-smart-city-scheme

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 100 ஆண்டு கால பேருந்து நிலையத்தை  எதிர்காலத்தில் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையமாக மாற்றும் பணிகள் விரைவில் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டார். 

நெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் ரூ.78 கோடி மதிப்பிட்டில் நவீன வசதிகளுடன்  அன்டர் கிரவுண்டில் கார், டூவிலர் பார்க்கிங், தரை தளத்தில் பஸ்கள் நிறுத்தும் வசதி, இரண்டாவது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் மல்டி லெவல் காம்ப்ளக்ஸ் அமையவுள்ளது.  

இதற்கான பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் மற்றும் பொறியாளர்கள் , அதிகாரிகள் புதிதாக அமையவுள்ள  பஸ் நிலைய வரைபடத்துடன் முதற்கட்ட ஆய்வு நடத்தினார்கள், இந்த பணிகள் அடுத்த வாரம்  தொடங்கி 18 மாதங்களில் . முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close