ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம்: அ.தி.மு.கவினர் மாபெரும் பேரணி!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 10:49 am
jayalalitha-death-anniversary-march-to-chennai-marina

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.கவினர் இன்று மாபெரும் பேரணி நடத்துகின்றனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெறுகிறது. 

முன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெறுகிறது. இதில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த பேரணி முடிவடைந்தவுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அனைவரும் மரியாதை செலுத்தி விட்டு உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close