அரசியலில் எதிர்நீச்சல் போட்டவர் ஜெயலலிதா: கனிமொழி ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 12:43 pm

kanimozhi-about-j-jayalalitha

முன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெற்றது

இந்நிலையில் தி.மு.க மகளிரணி தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி  தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா குறித்து பதிவிட்டுள்ளார். 

அதில், "ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது" என தெரிவித்துள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.