3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 12:52 pm
weather-report-chennai-met

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்கள் 5,6,7 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து குமரி முதல் வடக்கு கேரளா நிலவி வருகிறது. 

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

எனவே தென்மேற்கு வங்கக்கடல் , மன்னா வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு 5, 6, 7 ஆகிய தேதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சோழவரத்தில் 8 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close