திடீர் நெஞ்சுவலி அப்பல்லோவில் அதிமுக சீனியர் எம்.பி அனுமதி! அப்பலோ பறக்கும் முதலமைச்சர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 05:38 pm
thambidurai-mp-admitted-in-apollo

நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று இரவு 7 மணிக்கு அப்பல்லோ செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மக்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் பேரணியில் கலந்து கொள்வதற்காக கரூரில் இருந்து சென்னை வந்திருத்தார். நேற்று மாலை 5 மணியளவில், திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவர்கள், ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று இரவு 7 மணிக்கு அப்பல்லோ செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close