மாநில அரசின் அறிவிப்புகள் அனைத்துமே வெறும் செய்தி மட்டும்தான் - அமீர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 06:15 pm
ameer-press-meet

தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் அனைத்தும் வெறும் செய்தியாகவே உள்ளன என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் இறுதி அஞ்சலியின் போது தமிழக அரசை அவதூராக பேசியதாக இயக்குனர் அமீர் மீது தொடரப்பட்ட வழக்கு அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் அமீர், “அரியலூர் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தையாகும். இதில் தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படுகிறது. 

கஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாமலேயே உள்ளது. இதனால் தான் இதுவரை புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடவில்லை. தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மத்திய அரசு சொல்வதை கேட்கும் அரசாகவே தமிழக அரசு உள்ளது. மாநில சுயாட்சி மறுக்கப்படுகிறது. மாநில சுயாட்சி கிடைக்கும் போது தான் மாநிலத்திற்கான உரிமைகள் கிடைக்கும். ஒகேனக்கலில் அணை கட்டினால் மகிழ்ச்சிதான். தற்போதுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் அனைத்தும் வெறும் செய்தியாகவே உள்ளன. நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close